திருமலையிலிருந்து கதிர்காமம் நோக்கிப் புறப்பட்ட பாதயாத்திரை இன்று மட்டு நகருக்கு..!

திருகோணமலையில் இருந்து ஆரம்பித்த கதிர்காமத்திற்கான பாதையாத்திரைக் குழுவினர் கடந்த 11 நாட்கள் பாதயாத்திரை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை (11) மட்டக்களப்பு வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் நோயினால் கடந்த மாதம் யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பித்த பாதயாத்திரை 24 மணித்தியாலயத்தில் நிறுத்தப்பட்டதுடன் பாதையாத்திரை தொடர்பாக எந்தவெரு அறிவித்தலும் இன்னமும் அரசாங்கத்தினால் அறிவிக்கப்படவில்லை.இந்த நிலையில், கடந்த மாதம் 21 ம் திகதி திருகோணமலையில் லங்கா பட்டினம் முருகன்கோவில் இருந்து 35 பேர் கொண்ட பாதயாத்திரைக் குழுவினர் 11 நாட்கள் பின்னர் வாழைச்சேனை கயிலாய பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்துள்ளனர்.கடந்த 15 வருடங்களாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் இப் பாதையாத்திரை கொரோனா நோய் காரணமாக இருந்த ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் பல தளர்த்தப்பட்டதையடுத்து இவ்வருடம் எதிர்வரும் ஜூலை 18 ஆம் திகதி கதிர்காமத்திற்கு சென்றடைய திட்டமிட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இருந்த போதும், கதிர்காமத்துக்கு கொண்டு செல்ல தூக்கிய வேலை இடையில் வைக்க முடியாது. எனவே கதிர்காமத்திற்கு செல்லவதற்கு தடைவிதிக்கப்பட்டால், மட்டக்களப்பு தாந்தா முருகன் ஆலையம் சென்று தரிசித்து அங்கிருந்து தொடர்ந்து காட்டுவழியாக கதிர்காமத்திற்கு சென்றடையவுள்ளதாக பாதையாத்திரைக் குழுவினர் தெரிவித்தனர்.