யாழில் நேற்று நடந்த கொரோனா பரிசோதனை முடிவு குறித்து மருத்துவர் சத்தியமூர்த்தி வெளியிட்ட நிம்மதி தரும் செய்தி…!!

யாழ்ப்பாணத்தில் நேற்று பரிசோதிக்கப்பட்ட 15 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது என யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி இன்று காலை தெரிவித்தார். ”யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் 8 பேருக்கும் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 பேருக்கும் நேற்றுப் பகல் ஆய்வுகூட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இவர்களில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று நேற்றிரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.எனவே, யாழ்ப்பாணத்தில் இதுவரை 7 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றும் வைத்தியர் சத்தியமூர்த்தி மேலும் கூறினார்.