கொரோனாவின் இரண்டாவது அலை தொடர்பில் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட விஞ்ஞானிகள்!!

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் . இதனால் 72 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தொற்றின் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அது மட்டுமின்றி சிகிச்சைகள் பலனின்றி 4 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இப்படி கொரோனாவின் முதல் சீசன், உலக நாடுகளை பாடாய்ப்படுத்திக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாடும் பொருளாதார ரீதியில் தள்ளாடி வருகின்றன. ஊரடங்கால் பெரும் இழப்புகளை சந்தித்துள்ள உலக நாடுகள், சுகாதார வசதிகளையும், உள்கட்டமைப்புகளையும் மேம்படுத்த பெருந்தொகைகளை செலவழிக்கிற நிலையும் ஏற்பட்டுள்ளது.அதற்குள் கொரோனா வைரஸ் தொற்றின் 2 ஆவது அலையும் வந்து தாக்கும் என உலகளவில் விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் எச்சரிக்க தொடங்கி இருக்கிறார்கள். இந்த நேரத்தில் இங்கிலாந்து நாட்டில் விஞ்ஞானிகள் ஒரு முக்கிய ஆய்வை நடத்தி உள்ளனர்.மக்களிடையே கொரோனா வைரஸ் தொற்றின் பரவலை, பொதுமுடக்க காலத்தின் முக கவச பயன்பாட்டுடன் இணைத்து, பல மாதிரிகளின் அடிப்படையில் ஆராய்ந்துள்ளனர்.இந்த ஆய்வு முடிவுகள், ராயல் சொசைட்டி பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:ஆய்வுக்கு தலைமை தாங்கிய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ரிச்சர்ட் ஸ்டட்புரோம் கூறும்போது, “நாங்கள் நடத்திய பகுப்பாய்வானது, உடனடியாக உலகமெங்கும் அனைவரும் முக கவசங்கள் அணிய வேண்டும் என்பதை ஆதரிக்கின்றன.மேலும், பொதுமக்கள் அனைவரும் முக கவசங்கள் அணிந்து கொண்டு, தனி மனித இடைவெளியை பராமரித்து, ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்றினால் இது கொரோனா வைரஸ் தொற்றுநோயை நிர்வகிப்பதற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய வழியை வழங்கலாம். பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்பாகவே இது தடுப்பூசி போல வேலை செய்யும்” என்கிறார்.50 சதவீதமோ அதற்கு மேற்பட்டவர்களோ முக கவசங்களை அணிகிறபோது, அது கொரோனா வைரஸ் பரவலை குறைக்கிறது. எதிர்கால அலைகளை தட்டையாக்குகிறது. குறைவான கட்டுப்பாடுகளுடனான பொது முடக்கத்தை அனுமதிக்கிறது.ஊரடங்கு இருந்தாலும் சரி, இல்லாவிடினும் சரி 100 சதவீத மக்களும் முக கவசங்களை எப்போதும் அணிந்து கொள்கிறபோது, அது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும்.தடுப்பூசி கண்டுபிடிக்க தேவையான 18 மாதங்களுக்கு மேலும் அதிகமாக கொரோனா மீண்டும் எழுவதை தடுக்கும்அனைவரும் முக கவசங்கள் அணிய வேண்டும் என்ற கொள்கையானது, கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலைகளை தடுக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.