அறிகுறிகளற்ற கொரோனா தொற்றினால் ஆபத்துகள் இல்லை..!! உலக சுகாதார ஸ்தாபனம்..!!

அறிகுறிகளற்ற கொரோனா தொற்றால் எவ்வித ஆபத்துகளும் இல்லையென்றும் இது மற்றவர்களுக்கு பரவுவது என்பது அரிதானது என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.சுவிற்சர்லாந்திலுள்ள ஜெனீவாவில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய உலக சுகாதாரஸ்தாபனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடும் போது;

கடந்த 10 நாட்களில், 9 நாட்கள் தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இந்த 9 நாட்களில் ஒரு நாளில் மாத்திரம் ஒரு லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு தெரிய வந்துள்ளது.குறித்த பாதிப்பில் 75 சதவீதம், அமெரிக்கா மற்றும் ஆசியாவின் 10 நாடுகளில் பரவியுள்ளது.எவ்வித அறிகுறிகளுமற்ற கொரோனா தொற்றால் ஆபத்து இல்லை. காரணம், இது மற்றவர்களுக்கு பரவுவது என்பது அரிது என்ற தகவலை உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோய் மருத்துவ நிபுணர் மரியாவான்கெர்கோவ் தெரிவித்துதுள்ளார்.இது தொடர்பில் அவர்;எங்களிடம் உள்ள தரவுகள், ஒரு அறிகுறியற்ற கொரோனா தொற்றுள்ள நபர், மற்றொருவருக்கு கொரோனா தொற்றை பரப்புகிறார் என்பது மிகவும் அரிதாகவே தோன்றுகிறது. இது மிகவும் அரிது.இவ்வாறு அறிகுறிகள் இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு ஆளாகிற நபர்கள், தொடர்பு தடம் அறிதல் மூலம் அடையாளம் காணப்படுகிறார்கள். இவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதில்லை என்பது தொடர்பு தடம் அறிந்த நாடுகளின் தரவுகளில் இருந்து தெரிய வந்திருக்கின்றது.இந்த தரவுகளை உறுதிப்படுத்துவதற்கு உலக சுகாதார நிறுவனம் மறு ஆய்வு செய்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.