பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் இன்று..!!

பல்கலைக்கழங்களில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது சம்பந்தமாக இன்று தீர்மானிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இது சம்பந்தமான விசேட கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது.இந்த கூட்டத்தில் உபவேந்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறியுள்ளார்.பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதற்காக ஆலோசனைகளை சுகாதார அமைச்சு ஏற்கனவே வழங்கி இருப்பதாகவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.பகுதி, பகுதியாக கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.