யாழில் 50வது தடவையாகவும் இரத்த தானம் செய்து சாதனை படைத்த பெண்மணி..!!

யாழில் பெண் ஒருவர் 50 ஆவது தடவையாக இரத்தம் வழங்கி சாதனை படைத்துள்ளார்.விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டத்தின் கீழ் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தின் பன்னாலையை சேர்ந்த மூத்த உறுப்பினரான வற்சலா வைரமுத்து அவர்கள் கருகம்பனை கலாச்சார மண்டபத்தில் வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்ட இரத்த தானத்தில் ஐம்பதாவது தடவையாக இரத்தம் வழங்கியுள்ளார்.இவர் முதல் முறையாக மகாஜான கல்லூரியில் 18 வயதில் இரத்த தானம் செய்யத் தொடங்கியுள்ளார்.இந்நிலையில், அவர் ஐம்பதாவது தடவையாக இரத்த தானம் வழங்கியுள்ளார்பல்வேறு தரப்பினரும் இவரை பாராட்டி வருகின்ற நிலையில், தானத்தில் சிறந்த தானம் இரத்த தானம் ஆக கொள்ளப்படும் இரத்த தானத்தை 50 தடவைகள் வழங்கிய இந்தப் பெண் போன்று, அனைவரும் முன்வந்து இரத்த தானத்தை மேற்கொண்டு இரத்த வங்கிகளில் ஏற்படுகின்ற தட்டுப்பாடுகளை பூர்த்தி செய்ய முன்வர வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.