இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி….ஜூன் 15 முதல் மீண்டும் ஆரம்பம்..!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக நாடளாவிய ரீதியில் மூடப்பட்டிருந்த, அனைத்து பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள், மிருகக் காட்சிசாலைகள் எதிர்வரும் ஜூன் 15 முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைவாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக இவ் சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட உள்ளன.எனினும், சுற்றுலாப் பயணிகள் கோரோனா தொற்றுக்கு எதிரான சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாகவே அனுமதிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.