இரண்டு மாதக் குழந்தையிடம் பாலியல் அத்துமீறல்..!! வசமாக சிக்கிய தந்தை… தமிழகத்தில் நடந்த கேவலம்…!!

சேலம் மாவட்டம் அந்தியூரில் 2 மாத பெண்குழந்தையிடம் பாலியல் அத்துமீறல் செய்த தந்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் துளசிமாதன். இவரது மனைவி சமீபத்தில்தான் ஒரு பெண்குழந்தையை பிரசவித்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் இப்போது குழந்தையை வீட்டில் விட்டு வெளிவேலையாக மனைவி வெளியே சென்றுள்ளார்.திரும்பி அவர் வீட்டுக்கு வந்த போது, தனது கணவர் குழந்தையிடம் பாலியல் ரீதியாக அத்துமீறுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து உடனடியாக குழந்தையை அவரிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு காவல் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்துள்ளார்.இதையடுத்து போலிஸார் நடத்திய விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார் துளசிமாதன். இதையடுத்து அவர் மேல் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.