அரசாங்க, தனியார் ஊழியர்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு.!! பணிக்கு செல்லும் நேரத்தில் மிக விரைவில் அதிரடி மாற்றம்.!! ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு..!!

அரச மற்றும் தனியார் பிரிவு ஊழியர்கள், பணி செய்யும் இடத்திற்காக வரும் நேரத்தினைத் திருத்தம் செய்யும் வகையில் பரிந்துரை செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கொழும்பு மற்றும் புறநகரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றமையை கருத்திற் கொண்டு ஜனாதிபதி இந்தக் குழுவை நியமித்துள்ளார்.போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தனியார் மற்றும் அரச ஊழியர்கள் பணிக்கு செல்லும் நேரத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.குறித்த பரிந்துரைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி இந்த குழுவிடம் தெரிவித்துள்ளார். அலுவலக நேரத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் ஒரு வாரத்திற்குள் பரிந்துரைகளை வழங்க வேண்டும். அந்தப் பரிந்துரைகள் பொது நிர்வாக அமைச்சிடம் மேலதிக ஆய்விற்காக வழங்கப்பட வேண்டும்.அத்துடன் பாடசாலை நேரம் மற்றும் அலுவலக நேரத்தில் போக்குவரத்து நெரிசல் மேலும், அதிகரிக்கும் என்பதனால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.