தற்போது கிடைத்த செய்தி…பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு.!!

இலங்கை ஜனாநாயக சோசலிஷக் குடியரசின் அடுத்த பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

தேர்தல்கள் செயலகத்தில் தற்போது நடைபெற்று வரும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இன்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு திகதியை ஏகமனதாக முடிவு செய்ததாகவும், இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பை அரச அச்சகத்திற்கு அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்தார்.