புருண்டி நாட்டின் ஜனாதிபதி திடீர் மாரடைப்பினால் மரணம்.!! பெரும் சோகத்தில் நாட்டு மக்கள்..!!

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று புருண்டி. இந்த நாட்டின் அதிபராக 55 வயதான பியர் குருண்சிஸா இருந்து வந்தார்.பியருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கருசியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் மரணம் அடைந்ததாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மாரடைப்பு காரணமாக பியர் குருன்சிஸா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலையில் சற்று முன்னேற்றம் இருந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார்.ஜனாதிபதி இறப்பைத் தொடர்ந்து 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று புருண்டி அரசு தெரிவித்துள்ளது.சுமார் 2005 ஆம் ஆண்டு முதல் சுமார் 15 ஆண்டுகள் புருண்டியை ஆட்சி செய்தார் பியர் குருன்சிஸா. இவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.