பிறந்தநாளே இறந்த நாளாக மாறிய சோகம்.!! மற்றுமொரு முக்கிய அரசியல்வாதியை இழந்த தமிழகம்..!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் இன்று காலமானார்.

திமுக எம் எல்ஏ ஜெ அன்பழகன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த இரண்டாம் ஆம் திகதி முதல் சிகிச்சை பெற்று வந்தார்.இதனையடுத்து அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அண்மையில் அன்பழகனின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.இந்நிலையில், இன்று அன்பழகன் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடமாக மாறியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.நள்ளிரவில் அவருக்கு அதிகமான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக சிகிச்சைப் பலனின்றி இன்று ஜெ.அன்பழகன் காலமானார். இன்றுதான் அன்பழகனின் பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.