15 நாளில் சர்க்கரை அளவு கட்டுக்குள்..! இதை பயன்படுத்தினால் மட்டுமே..!

நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் வராமல் தடுக்கவும், கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியும்.இத்தகைய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட வைப்பது நம் உணவு முறையே.பொதுவாக 35 வயது வரை உணவில் எந்தக் கட்டுப்பாடும் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. அவரவர் வாழும் சூழ்நிலை, உத்தியோகம், பணி இவற்றைப் பொறுத்து தங்களுக்கு ஒத்து வரக் கூடிய, தங்களுக்குப் பிடித்த எந்த உணவையும் சாப்பிட்டுவரலாம்.

ஊட்ட சத்துள்ள உணவுப் பழக்கம் எக்காலத்திற்கும், யாவர்க்கும் பொருந்தி வரக் கூடிய ஓர் ஆரோக்யமான உணவுப்பழக்கமாகும்.35 வயதிற்குப் பின் உணவு முறையில் சில கட்டுப்பாடுகளை வைத்துக் கொள்ளுதல் அவசியம்.அவர்கள் அரிசியில் உள்ளஅதிகப்படியான ஸ்டார்ச் சத்து சர்க்கரை நோய் உள்ளவர்களை மிகவும் பாதிப்பதால் ஸ்டார்ச் குறைவாக உள்ள கோதுமையைஅதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.இரவு உணவு கோதுமை சப்பாத்தியாக, கோதுமை தோசையாக இருத்தல் நலம். சர்க்கரையின் அளவைப் பாதியாகக்குறைத்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு பதிலாக வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து கொள்வது நல்லது.சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்க தினமும் காலையில் எழுந்தவுடன் நிறைய சுத்தமான தண்ணீர் குடிக்கும்பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.அத்துடன் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் இரண்டு ஸ்பூன்அளவு சாப்பிட்டு வரலாம்.மேலும் வேப்பிலைக் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தாலும் ஆரம்ப நிலையிலுள்ள சர்க்கரை நோய் குணமாகும்.50 வயதிற்குப் பின் சர்க்கரையை தவிர்த்து விடுவது நல்லது. 40 வயது முதல் நெய்யை உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது.

சர்க்கரை நோய் முற்றிய நிலையிலிருந்தால் காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் அரிசி சாதத்தைத்தவிர்த்து கோதுமை உணவை மட்டுமே ஏற்க வேண்டும்.ஆரம்ப நிலையிலுள்ள சர்க்கரை நோய்க்கு அருகம்புல் சாறு ஒரு டம்ளர் நீர் அருந்த பலன் கிடைக்கும்.சரி வாருங்கள் இவற்றை எல்லாம் சேர்த்து ஒரே மருந்து தயாரிப்பது எப்படி என்பதை தெளிவாக கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்