உடலில் வெளியில் தோற்றம் அளிக்கும் உறுப்புகளாக நம் கைகளும், பாதங்களும் இருக்கிறது. அதில் நகம் ஒரு முக்கியமான இடம் ஆகும். நகத்தை பாதுகாக்க தற்போது பலர் Pedicure, manicure செய்து வருகின்றனர்.
நகங்களை பூஞ்சை மற்றும் பாக்டீரியா கிருமிகள் தாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். பராமரிப்பு சரியாக செய்யவில்லையெனில் நகம் சொத்தை அடையும், அது வலியை தருவதோடு நகம் உடைவது, கெட்ட வாடை வருவது, அருகில் உள்ள நகங்களில் பரவுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.மஞ்சள்:தினமும் குளிப்பதற்கு முன், மஞ்சள் பொடியை ஆலிவ் எண்ணெயில் கலந்து, நகங்களில் தடவி மசாஜ் செய்யுங்கள். ஐந்து நிமிடங்கள் கழித்து குளிக்கச் செல்லலாம். நகங்களில் ஏற்படும் தொற்றை இது எதிர்க்கும்.

பேக்கிங் சோடா:பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல செய்து அதை சொத்தை நகங்களில் தடவி 20 நிமிடம் ஊற விட வேண்டும்.பேக்கிங் சோடா இயற்கையில் ஒரு காரத் தன்மை கொண்டது. இதனால் சொத்தை மேற்கொண்டு அதிகரிக்காமலும், மற்ற விரல்களுக்கு பரவாமலும் தடுத்துவிடும்.எலுமிச்சை சாறு:எலுமிச்சை சாறினை ஒரு பஞ்சினால் எடுத்து, அதனை நகங்களில் பூசி வந்தால், பூஞ்சை தொற்று மற்றும் அழுக்குகள் நீங்கும்.

மருதாணி:அடிக்கடி மருதாணி இலைகளை அரைத்து நகங்களில் பூசி வந்தால் சொத்தை நகங்கள் விழுந்து புதிய நகங்கள் முளைக்கும்.வேப்பில்லை:கைஅளவு வேப்பில்லை எடுத்து அரைத்து அதில் சிறிது மஞ்சள் தூள் கலந்து சொத்தை நகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்துக் கழுவவும்.