ஐந்தே நாளில் தேமல், அரிப்பை போக்கும் அதிசயம்..!! வீட்டிலேயே இருக்கும் எளிய மருத்துவம்..!!

இன்றைய காலத்தில் பலரும் தேமல் பிரச்னையோடு தவிப்பர்கள் தான். நாம் பயன்படுத்தும் பெட்ஷீட், டவல் ஆகியவை சுத்தமாக இல்லாவிட்டாலும் இந்த பிரச்னை வரும். இதை எளிமையான முறையில் போக வைக்க முடியும். அதுகுறித்து தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்.

முதலில் ஒரு பப்பாளிக் காயை எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் தோலை முழுமையாக நீக்க வேண்டும். இதை மிக்ஸில் போட்டு நன்றாக பேஸ்ட் போல் அரைத்துவிட வேண்டும். இப்போது இந்த பேஸ்டை இரண்டு டீ ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனோடு கால் டீ ஸ்பூன் அளவுக்கு மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதோடு எவியான் 200 எம்.ஜி மாத்திரையையும் ஒன்று சேர்த்து, நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். இதனோடு கால் டீ ஸ்பூன் அளவு கற்றாழை ஜெல்லை சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த கற்றாழை ஜெல் தொற்றில் உள்ள கிருமிகளை விரட்டி அந்த இடத்தை சுத்தப்படுத்துகிறது.

இதை தேமல் இருக்கும் இடத்தில் இரவில் தடவி விட்டு, காலையில் வெது,வெதுப்பான தண்ணீரில் கழுவி விட வேண்டும். இந்த மாதிரி தொடர்ந்து ஐந்து நாள்கள் செய்தால் தேமல், அரிப்பு ஓடி விடும்.