கிட்னி செயல் இழக்க முக்கிய காரணம் இதுதான் தெரியுமா?

அலுவலகத்தில் உங்கள் பக்கத்தில் இருப்பவர் திடீரென பெர்மிஷன் போட்டு கிளம்புவார். “எங்கே கிளம்பிட்டீங்க…?” என்று கேட்டால், “இன்னைக்கு டயாலிசிஸ் பண்ணனும்,” என்பார். அப்படித்தானே!

அந்த அளவுக்கு கிட்னி என்னும் சிறுநீரக பிரச்னை அதிகமாகி விட்டிருக்கிறது. ஏதோ வேண்டுதல்போல, மக்கள் மருத்துவமனைகளுக்குச் சென்று டயாலிசிஸ் என்னும் செயற்கை சிறுநீரக செயல்பாடுக்காக படுத்துக் கிடக்கின்றனர்.

சிறுநீரகத்தின் செயல்பாடு:சிறுநீரகம் நம் உடலிலுள்ள மிக முக்கியமான உறுப்புகளுள் ஒன்று. விலாவின் கீழாக முதுகுதண்டின் இருபுறமும் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. இரத்தத்திலுள்ள கழிவுப் பொருள்களை நீக்குவதோடு உடலில் திரவங்களின் அளவையும் இது ஒழுங்குபடுத்துகிறது.
ஒருநாளைக்கு நம் உடலுள்ள 800 மில்லி லிட்டர் கழிவுப்பொருளையும் அதிகப்படியான நீரையும் வெளியேற்றுவதன் மூலம் 180 மில்லிலிட்டர் அளவுள்ள இரத்தத்தை சிறுநீரகங்கள் சுத்திகரிக்கின்றன. உடலில் எலக்ட்ரோலைட் என்னும் தாதுகளின் அளவை சரியாக காத்துக்கொள்வதோடு, இரத்த சிவப்பணுக்களை உருவாக்கும் ஹார்மோன்களையும் உற்பத்தி செய்கிறது. ஆகவே, சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம்.

சிறுநீரகம் பழுதுபடல்:உயர்இரத்த அழுத்தம், நீரிழிவு ஆகிய குறைபாடு உள்ளவர்களுக்கும், பரம்பரையில் சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கும் சிறுநீரக செயல்பாட்டில் கோளாறு வருவதற்கு வாய்ப்புள்ளது. இதுபோன்று எந்த தொடர்பும் இல்லையென்று கூறுபவர்களும்கூட சிறுநீரகங்களை ஆரோக்கியமாக காத்துக்கொள்ளும் வழிகளை கையாளுவது நல்லது.

நீர் அருந்துங்கள்:சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்று விரும்புபவர்கள், ஏராளமாக நீர் அருந்தவேண்டும். உதாரணமாக, 70 கிலோகிராம் எடையுள்ள நபர் ஒருநாளுக்கு குறைந்தது 2.5 லிட்டர் நீர் அருந்தவேண்டும். அப்போதுதான் உடலில் நீர்ச்சத்து குறைவுபடாது.

சிறுநீர், வைக்கோல் நிறத்தில் வெளியேறினால் போதுமான நீர்ச்சத்து உடலில் இருக்கிறது என்று அர்த்தம். அதைவிட அடர்ந்த நிறமாக வெளியேறினால் அதிகமாக நீர் அருந்தவேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம். சில மருந்துகள் எடுத்துக்கொள்வோருக்கு சிறுநீர் நிறமற்றதாகவும் இருக்கும். சிறுநீர் பிரிவதற்கான மருந்துகள் மற்றும் உணவு பொருள்கள் சாப்பிடுபவர்களுக்கு அதிகமாக சிறுநீர் வெளியேறுவதால் உடலில் நீர்ச்சத்து மற்றும் சோடியம் என்ற தாது ஆகியவை குறைய நேரிடலாம்.கிட்னி செயலிழப்பை தடுக்கும் 5 உணவுகளையும் அதன் பயன்களையையும் கீழே உள்ள வீடியோவில் காணலாம்.