முன்னாள் அமைச்சர் ராஜித பிணையில் விடுதலை!!

வெள்ளை வாகனக் கடத்தல் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்னவை விடுவிக்க கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியானகே இன்று உத்தரவிட்டார்.

கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்திய போதே அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.சர்ச்சைக்குரிய வெள்ளை வான் ஊடக சந்திப்பை நடத்திய சம்பவம் தொடர்பாக ராஜித சேனாரத்ன கடந்த மாதம் 13ஆம் திகதி குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.இந்த சந்தர்ப்பத்தில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இது தொடர்பான விசாரணைகள் பெரும்பாலும் முடிவுக்கு வந்துள்ளதாக குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.