25 வயதான இளைஞனுக்கு கொரோனா தொற்று..!! கொழும்பின் புறநகர்ப் பகுதிகள் சில முடக்கம்..!!

கொழும்பின் புறநகர் பகுதியான ஜா-எல சுதுவெல்ல மற்றும் பாரிஸ் பெரேரா மாவத்தை ஆகிய பகுதிகள் நேற்று இரவு முதல் முடக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் வசிக்கும் 25 வயதான இளைஞர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று இரவு உறுதிசெய்யப்பட்டது.இதனை தொடர்ந்தே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.