தேர்தல் திகதியை தீர்மானிக்க இன்று மீண்டும் கூடுகின்றது தேர்தல் ஆணைக்குழு..!!

பொதுத் தேர்தலிற்கான திகதியை இறுதி செய்ய, இன்று (10)தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் ஒன்றுகூடுகிறது.

ஓகஸ்ட் மாத முற்பகுதியில் தேர்தல் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டிருந்தாலும், திகதி குறித்து இன்னும் இறுதிசெய்யப்படவில்லை. நேற்று முன்தினம் திங்கள்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு ஒன்று கூடியபோதும், அன்றும் இறுதி தீர்மானத்திற்கு வர முடியவில்லை. ஓகஸ்ட் 5, அல்லது 8ஆம் திகதி தேர்தல்களை நடத்தலாமென இரண்டு விதமான கருத்துக்கள் ஆணைக்குழுவில் உள்ளது.இன்றைய கலந்துரையாடலுக்கு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.