யாழ்ப்பாணம் நாக விகாரை மீது மர்ம நபர்கள் தாக்குதல்!! இராணுவம் பொலிஸார் தீவிர பாதுகாப்பு..!!

யாழ்ப்பாணம் நாக விகாரை மீது அடையாளம் தெரியாத நபர்களால் இன்று அதிகாலை கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் நாக விகாரையின் முகப்பில் உள்ள புத்தர் சிலையின் கண்ணாடிகள் உடைந்துள்ளதுடன், புத்தர் சிலையும் சிறியளவிலான சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.குறித்த தாக்குதல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவத்தையடுத்து நாக விகாரை பகுதியில் ஏராளமான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளதுடன், விகாரைக்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.