பிரதமர் மஹிந்த உட்பட பிரபலங்களின் விருப்பு வாக்கு இலக்கங்கள் வெளியீடு..!!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களின் விருப்பு வாக்கு இலக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொது தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் மூவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, சமகி ஜனபலவேகய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவின் வேட்பு இலக்கங்கள் வெளியாகியுள்ளது.அதற்கமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 17 என்ற இலக்கத்தின் கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் வேட்பு இலக்கம் 15ஆகும்.சமகி ஜனபலவேகய கட்சியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸவின் வேட்பு இலக்கம் 20 என அறிவிக்கப்பட்டுள்ளது.அரச அச்சகத்தினால் இன்று வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.