நாடாளுமன்ற அரசியலில் இருந்து மங்கள சமரவீர திடீர் ஓய்வு!!

நாடாளுமன்ற அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.இன்று அவர் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக வேட்புமனு தாக்கல் செய்துள்ள முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர எதிர்வரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் நாடாளுமன்ற அரசியலில் இருந்து தான் விலக தீர்மானித்துள்ளதாகவும் எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனக்கு வாக்களிப்பதை தவிர்க்குமாறும் அவர் மாத்தறை மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளார்.இதன்படி, 2020 பொதுத்தேர்தல் பிரச்சார பணிகளிறிலிருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். தமது விருப்பு வாக்கிற்கு யாரும் வாக்கை செலுத்த வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.32 வருடங்களாக தமக்கு வாக்களித்த மாத்தறை மக்களிற்கு நன்றியை தெரிவித்துள்ளார்.நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த முடிவை தான் எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.