குறி வைக்கும் குரு, சனி! லாப ஸ்தானத்தில் எட்டி பார்க்கும் ராகு, புதன்!! யாருக்கெல்லாம் பேரதிர்ஷ்டம் தெரியுமா?

கொரோனா ஊராடங்கு சில தளர்வுகளுடன் நீடிக்கும் இந்த கால கட்டத்தில் இன்று முதல் ஜூன் 15 ஆம் திகதி வரை பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். மேஷம்:செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்கு 2ஆம் வீட்டில் சூரியன், சுக்கிரன், மூன்றாம் வீட்டில் ராகு, புதன், ஒன்பதாம் வீட்டில் கேது, பத்தாம் வீட்டில் குரு, சனி, லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த வாரம் உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் வரும் பணத்தை வைத்து செலவுகளை சமாளிப்பீர்கள்.

கணவன் மனைவிக்குள் காதலும் நெருக்கமும் வரும். வேலை செய்யும் இடத்தில் இருந்து நல்ல செய்தி தேடி வரும். பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருங்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வீட்டிலும் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

ரிஷபம்:சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்கு நவகிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் உங்க ராசிக்குள் சூரியன், சுக்கிரன் இரண்டாம் வீட்டில் ராகு, புதன், அஷ்டம ஸ்தானத்தில் கேது, ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சனி, குரு பத்தாம் வீட்டில் செவ்வாய் என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது.

வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கை தேவை. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புகுந்த வீட்டிலும் பிறந்த வீட்டிலும் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

மிதுனம்:மிதுனம் ராசிக்காரர்களே இந்த வாரம் விரைய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், உங்க ராசியில் ராகு,புதன் களத்திர ஸ்தானத்தில் கேது, அஷ்டம ஸ்தானத்தில் சனி, குரு, பாக்ய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. 08.06.2020 இரவு 7.45 மணி முதல் 11.06.2020 அதிகாலை 3.41மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருங்க.

வீட்டை விட்டு வெளியே எதற்காகவும் போகாதீங்க. வண்டி வாகனங்களில் போக வேண்டியிருந்தால் எச்சரிக்கையாக இருங்க. இந்த நாட்களில் மவுன விரதம் இருப்பது ரொம்ப நல்லது. இந்த வாரம் உங்களுக்கு நல்ல பணவரவு இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்படும். செலவுகளை சுப செலவுகளாக மாற்றுங்கள். நீண்ட விடுமுறைக்கு பின்னர் வியாபாரம் தொழிலை மீண்டும் ஆரம்பிப்பவர்கள் கடையை விரிவுபடுத்துவீர்கள். இந்த வாரம் பெருமாளை நினைத்து வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.

கடகம்:சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானத்தில் சூரியன்,சுக்கிரன், விரைய ஸ்தானத்தில் ராகு, புதன், எட்டாம் வீட்டில் செவ்வாய், ஏழாம் வீட்டில் சனி, குரு, ஆறாம் வீட்டில் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். பணவரவு உங்களுக்கு சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் நன்மைகள் அதிகமாக நடைபெறும். பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வேலை விசயமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டியிருக்கும்.

வியாபாரிகளுக்கு இந்த வாரம் விற்பனை அதிகரிக்கும் அதனால் லாபம் கிடைக்கும். இருக்கும் பணத்தை வைத்து சிக்கனமாக செலவு செய்யுங்கள் கடன் வாங்கி வீணாக செலவு செய்யாதீர்கள். மாணவர்கள் படிப்பில் அக்கறைகாட்டுவீர்கள். உங்க முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். வண்டி வாகனங்களில் போகும் போது நிதானமாக இருங்கள். நெருப்போடும், மின் சாதனங்களோடும் விளையாடாதீர்கள். இந்த வாரம் சோமவார தினத்தில் சிவபெருமானை வணங்குங்கள் நல்லதே நடக்கும். பிரச்சினைகள் தீரும்.சிம்மம்:சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே, இந்த வாரம் பத்தாம் வீட்டில் சூரியன்,சுக்கிரன், லாப ஸ்தானத்தில் ராகு, புதன், ஐந்தாம் வீட்டில் கேது ஏழாம் வீட்டில் செவ்வாய், ஆறாம் வீட்டில் சனி, குரு, என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

சொத்துக்களை வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கலாம். உங்களுக்கு நிதி நிலைமை சிக்கலாக இருந்தாலும் படிப்படியாக சீரடையும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வேலை செய்பவர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. தினசரி சூரிய நமஸ்காரம் பண்ணுங்க. பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

கன்னி:புதனை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, இந்த வாரம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சூரியன், சுக்கிரன், பத்தாம் வீட்டில் ராகு ஆறாம் வீட்டில் செவ்வாய் ஐந்தாம் வீட்டில் சனி, குரு, நான்காம் வீட்டில் கேது சஞ்சரிக்கின்றன.வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும்.உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். நீங்க எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.சுப காரியம் நடைபெறுவதில் இருந்த தடைகள் விலகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன் பார்க்க பேச்சுவார்த்தை நடத்தலாம். பெண்கள் வீட்டு வேலை செய்யும் போது எச்சரிக்கையாக இருக்கவும். வியாழக்கிழமை வீட்டில் விளக்கேற்றி வைத்து குருபகவானை வணங்குங்கள் பாதிப்புகள் தீரும்.

துலாம்:சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே இந்த வாரம் சூரியன் எட்டாம் வீட்டில் சுக்கிரனுடன் இணைந்துள்ளார். ஒன்பதாம் வீட்டில் ராகு,புதன், ஐந்தாம் வீட்டில் செவ்வாய், நான்காம் வீட்டில் சனி, குரு முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு லாபம் வரும். வேலையில் உற்சாகமும் நிம்மதியும் ஏற்படும்.

உங்களுக்கு பணவரவு வந்தாலும் செலவுகளால் பொருளாதார நெருக்கடி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். பேசும் வார்த்தையிலும் மின்சாதன பொருட்களை கையாளும் போதும் கவனமாக இருங்க. வண்டி வாகனத்தில் போகும் போது நிதானமாக இருங்க. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.முன்கோபத்தை குறைத்துக்கொள்ளுங்கள்.

விருச்சிகம்:செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே இந்த வாரம் சூரியன்,சுக்கிரன் ஏழாம் வீட்டிலும், எட்டாம் வீட்டில் ராகு,புதன், குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் கேது, சனி, குரு மூன்றாம் வீட்டிலும் செவ்வாய் நான்காம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார்.உங்களுக்கு பணவரவு உங்களுக்கு சிறப்பாக இருக்கும். தனியார் வேலையோ அரசு வேலையோ உங்களுக்கு இந்த மாதம் பதவி உயர்வு தேடி வரும் சந்தோஷத்தை அனுபவிக்க தயாராகுங்கள். அதே நேரத்தில் அலைச்சல் அதிகரிக்கும் பயணங்களில் கவனமாக இருக்கவும். தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சந்திப்பீர்கள். பணம் லாபம் வரும் என்றாலும் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க.

தனுசு:குருவை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, இந்த வாரம் சூரியன், சுக்கிரன் ஆறாம் வீட்டிலும் ஏழாம் வீட்டில் ராகு,புதன், மூன்றாம் வீட்டில் செவ்வாய், இரண்டாம் வீட்டில் சனி, குரு உங்க ராசியில் கேது சஞ்சரிக்கின்றன. முயற்சிகளுக்கு வெற்றிகள் தேடி வரும். வேலை வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும் லாபம் அதிகரிக்கும் பணம் பல வழிகளில் வந்து பாக்கெட்டை நிரப்பும்.

பெண்களுக்கு இந்த வாரம் மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். பேச்சில் கவனமாக இருங்க. அவசரப்பட்டு பேசிவிட்டு பின்னர் வருத்தப்பட வேண்டாம். மாணவர்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் தேர்வுக்கு தயாராவீர்கள்.

மகரம்:சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே உங்க ராசியில் சனி, குரு, இரண்டாம் வீட்டில் செவ்வாய், உங்களுக்கு விரைய ஸ்தானத்தில் கேது, ஐந்தாம் வீட்டில் சூரியன், சுக்கிரன், ஆறாம் வீட்டில் ராகு,புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உங்க நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தொழில் கூட்டாளிகள் இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உங்களின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். பிரச்சினைகள் தீரும். யாருக்கும் பெரிய அளவில் கடன் கொடுக்காதீங்க. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் விட்டுக்கொடுத்து போங்க பிரச்சினைகள் வராது.

மாணவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். தேர்வினை எதிர்கொள்ள தயாராகி வருகிறீர்கள். ஆர்வத்தோடு படிப்பீர்கள். விநாயகப்பெருமானை வணங்குங்கள் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

கும்பம்:சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்குள் செவ்வாய், நான்காம் வீட்டில் சூரியன், சுக்கிரன் விரைய ஸ்தானத்தில் சனி, குரு லாப ஸ்தானத்தில் கேது, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு,புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உங்க நிதி நிலைமை நன்றாக இருக்கும். கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும். மூத்த சகோதரியின் உதவி கிடைக்கும். திடீர் விரைய செலவுகள் வரும் சுப செலவுகளாக மாற்றுங்கள். தொட்டதுக்கெல்லாம் கோபப்படுவதை குறைத்துக்கொள்ளுங்கள். உங்க உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு வரும் நிதானமாக செயல்படுங்க. தேவையில்லாத அலைச்சல் டென்சன் வேண்டாம்.

மீனம்:மீனம் ராசிக்காரர்களே இந்த வாரம் விரைய ஸ்தானத்தில் செவ்வாய், மூன்றாம் வீட்டில் சூரியன், சுக்கிரன் சஞ்சரிக்கிறார்கள், நான்காம் வீட்டில் ராகு,புதன், லாப ஸ்தானத்தில் சனி, குரு, தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் கேது, என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த வாரம் உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். உங்களின் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். மனதும் உடலும் சுறுசுறுப்பாக இருக்கும். நீங்க செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடு செய்வீர்கள்.

தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு நிம்மதி ஏற்படும் சிலருக்கு பதவி உயர்வு வரலாம். சிலருக்கு கௌரவ பதவிகள் தேடி வரும். சுப காரிய நிகழ்ச்சிகள் கைகூடி வரும். கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கும். பெண்களுக்கு வீட்டில் சுறுசுறுப்பாக வேலை செய்வீர்கள். இந்த வாரம் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வணங்குங்கள் பாதிப்புகள் நீங்கும்.