கறுப்பின மனிதரை கழுத்து நெரித்துக் கொன்ற பொலிஸ் அதிகாரிக்கு 18 கோடி ரூபா பிணை!!

அமெரிக்க கருப்பரின நபர் ஜோர்ஜ் ஃபிளொயிட் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்க பொலிஸ் அதிகாரிக்கு 1 மில்லியன் டொலர் (இலங்கை பெறுமதியில் 18.5 கோடி ரூபா) பெறுமதியான பிணை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.அமெரிக்காவில் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் ஜோர்ஜ் ஃபிளொயிட் (46) என்ற கருப்பு இனத்தவர், கடந்த 25ஆம் திகதி பொலிசாரின் பிடியில் கொலை செய்யப்பட்டது, கருப்பு இன மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.ஜோர்ஜ் ஃபிளொயிட் கொலையில் முக்கிய குற்றவாளி டெரெக் சவ்வின் மற்றும் தொடர்புடைய 3 பொலிஸ் அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.4 பேரும் கைது செய்யபட்டு உள்ளூர் சிறையில் அடைக்கபட்டு இருந்தனர். இந்த நிலையில் சிறைசாலையில் இருக்கும் சவ்வின்வர் பிணையில் வெளியே வர முயற்சித்து வருகிறார்.இந்த் நிலையில் ஹென்னெபின் கவுண்டி மாவட்ட நீதிமன்றம் அவரது பிணை நிபந்தனைகளுடன் 1 மில்லியன் டொலராகவும் நிபந்தனைகள் இல்லாமல் 1.25 மில்லியன் டொலராகவும் நிர்ணயித்து உள்ளது.நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கு அவர் தனது துப்பாக்கிகளை கையளிக்க வேண்டும், சட்ட அமலாக்கத்தில் அல்லது எந்தவொரு பகுதியிலும் பாதுகாப்பில் ஈடுபடக்கூடாது, மாநிலத்தை விட்டு வெளியேற கூடாது, குடும்பத்துடன் தொடர்பு கொள்ளக்கூடாது போன்ற நிபந்தனைகளுக்கு ஒப்புகொண்டுள்ளார்.குற்றச்சாட்டுகளின் தீவிரம் மற்றும் வழக்கின் வலுவான மக்கள் எதிர்வினை ஆகிய இரண்டின் காரணமாக அரசு சட்டத்தரணி அதிக தொகையில் பிணை கேட்டுள்ளார்.இந்த வழக்கின் அடுத்த விசாரணை மீண்டும் ஜூன் 29 ஆம் திகதி நடைபெறும்.