மனைவி கர்ப்பமாக இருக்கும் போது ஆண்கள் இப்படி இருப்பது ஏன்…? இதற்காகத் தானாம்…தெரிந்து கொள்ளுங்கள்..!!

என் நண்பனும், அவனுடைய மனைவியும் ஹாஸ்பிட்டலுக்கு டெஸ்ட் எடுக்க போயிருந்தனர். கல்யாணமாகி இரண்டு வருடம், “வீட்டில் விஷேசம் இல்லையா?” என்ற கேள்வியை, காதில் கேட்டு, கேட்டு சலித்துப்போன நண்பனுக்கு இந்த முறை முடிவு சாதகமாக வந்தது. நீங்க அப்பா ஆகப்போறீங்கன்னு டாக்டர் சொன்ன ஒரு வார்த்தை, அவனை தலை, கால் புரியாமல் துள்ளிக்குதிக்கச்செய்திருக்கிறது. எப்படியோ அவனது ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில், கடவுளுக்கு நன்றி சொன்னேன்.

அப்படியே கொஞ்ச நாள் கழிந்தது. மனைவி கர்ப்பம் ஆகும் வரையில், சும்மா கிளீன் ஷேவ் செய்து, டிரெண்டியாக மீசை வைத்து, ஹீரோ மாதிரி, ஜாம்முனு இருந்த என் நண்பன். திடீரென சாமியார் மாதிரி, முடி வெட்டாமல், தாடி ஷேவ் செய்யாமல் கண் முன் வந்து நின்றான்.மாப்ள என்னடா கோலம் இது?” என்று கேட்டதற்கு, “டேய் வீட்டுல மாசமா இருக்காடா. அதுக்காக தான் தாடி எடுக்கல, முடி வெட்டலன்னு” சிரித்துக்கொண்டே பைக் எடுத்துட்டு கிளம்பினான்.அடுத்த கேள்வி நான் கேட்பதற்குள் ஆள் எஸ்கேப். ஒரு நாள் கையும் களவுமாக சிக்க, பிடித்து காரணத்தை கேட்டேன்.பொதுவாக தாடி, மீசை, முடி இது அதிகம் வைத்திருந்தால், பெண்கள் ஆண்களிடம் பேசத் தயங்குவார்களாம். இதனால் ஆண், பெண் இருவருக்கும் இடைவெளி இருக்கும்.இது பெண்கள் கற்ப காலத்தில் ஆண்கள் வேலி தாண்டாமல் இருக்கத்தானாம்.இன்றும் தாடி முடியுடன் இருந்தல், மனைவி மாசமா இருக்காங்களா என்று கேட்பார்கள். இது நாம் முன்னோர்களின் அறிவியல் வாழ்வியலில் ஒன்று.