பாடசாலை மாணவர்களுக்கு மிக முக்கியமான செய்தி.!! சற்று முன் வெளியான அதிரடி அறிவிப்பு.!! பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்..!!

எதிர்வரும் ஜூலை 06ஆம் திகதி மீண்டும் நாட்டிலுள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.இதன் அடிப்படையில், ஜூன் மாதம் 29ஆம் திகதியுடன் பாடசாலை விடுமுறைகளை முடிவுக்குக் கொண்டுவரப்பட உள்ளது.மேலும், ஜூன் 29ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும். எனினும், மாணவர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்பட மாட்டார்கள்.

அத்துடன் பாடசாலை ஆரம்பிக்கும் நடவடிக்கை 4 கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை உயர்தர பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பாடசாலைகள் 4 கட்டங்களாக திறக்கப்பட உள்ளன.இதன்படி ஜூலை 29ஆம் திகதி முதற்கட்டமாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அன்றைய தினம் மாணவர்கள் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள.இந்நிலையில் இரண்டாவது கட்டமாக ஜூலை 6ஆம் திகதி பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்போது தரம் 13, தரம் 11, தரம் 5 ஆகிய வகுப்புகள் ஆரம்பமாகும்.ஜீன் 20ஆம் திகதி 12 மற்றும் 10ஆம் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்.ஜூலை 26ஆம் திகதி தரம் 3,4,6,7,8 மற்றும் 9ஆம் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், உயர்தர பரீட்சைகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி, செப்டெம்பர் 7ஆம் திகதி முதல் அக்டோபர் 6ஆம் திகதி வரை உயர்தர பரீட்சைகள் இடம்பெறும்.அத்துடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்டெம்பர் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.இதேவேளை, இணைய வழிக் கல்வியை எதிரியாக பார்க்க வேண்டாம் எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.