கொரோனாவினால் வீட்டில் இருக்கும் நபர்கள் எப்படிப் பாதிப்படைகிறார்கள் தெரியுமா ?

கடந்த 3 மாதங்களாக உலக மக்களில் பெரும்பான்மையானவர்கள் வீடுகளில் முடங்கிக் உள்ளார்கள். இவர்கள் கொரோனாவில் இருந்து தப்பி, வேறு நோய்களுக்கு ஆளாகி வருகிறார்கள் என்பதே உண்மை நிலை ஆகும்.

வீட்டில் நாம் இருப்பது எமது நோய் எதிர்ப்பு தன்மையை வெகுவாக பாதிக்கும் என்ற உண்மையை நாம் முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.மனிதர்கள் வெளியே சென்றுவந்தால், உடலில் சூரிய வெப்பம் படுகிறது. இதனூடாக அவர்கள் தோல் தயாரிக்கும் வைட்டமின் D உடலுக்கு மிக மிக தேவையான ஒன்று ஆகும். நமது நுரையீரல்களில் உள்ள பேருண்ணிகளுக்கு வைட்டமின் டி சக்தியைத் தருகிறது. இவை தான் சுவாச மண்டலத்தில் நோய்த் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் முதல்வரிசை வீரர்களைப் போன்றவை.நுண்ணுயிர்களை எதிர்க்கக் கூடிய புரதத்தை உற்பத்தி செய்யும். வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை அது நேரடியாகத் தாக்கிக் கொன்றுவிடும். B மற்றும் T செல்கள் போன்ற மற்ற நோய் எதிர்ப்பு செல்களின் செயல்பாடுகளையும் அது ஊக்குவிக்கும்.நீண்டகால நோய் எதிர்ப்பாற்றலுக்கு இவை காரணமாக இருக்கின்றன. வைட்டமின் டி குறைவாக உள்ளவர்களுக்கு, சளிக்காய்ச்சல் என்ற மூச்சுக் குழாய்ப் பாதையில் நோய்த் தொற்று ஏற்படும் ஆபத்து அதிகம். கோவிட் 19 நோய்த் தாக்குதலால் அதிகம் உயிரிழப்புகள் நிகழ்ந்த ஸ்பெயின் மற்றும் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பியர்களுக்கு வைட்டமின் டி அளவு மிகக் குறைவாக இருந்தது என்று இந்த மாத ஆரம்பத்தில், டப்ளின் டிரினிட்டி கல்லூரி முதுமையியல் நிபுணர் ரோஸ் கென்னியும், அந்தப் பெண்ணின் சகாக்களும் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளனர்.முதலில், முதலில் இன்டர்லெயுக்கின்௬ என்ற அழற்சியை ஏற்படுத்தும் உயிரிவேதிப் பொருளை வைட்டமின் டி குறைப்பதாகத் தெரிகிறது. இந்த அழற்சி இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொண்டால் கோவிட் 19 தொற்றுவதற்கான வாய்ப்புகள் குறையும் என்பதற்கு அறிவியல்பூர்வமான தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும், சளிக் காய்ச்சல் மற்றும் சாதாரண சளி போன்ற மற்ற வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக நமது தற்காப்பை அது பலப்படுத்துகிறது என்பதற்கு பல்வேறு ஆய்வு முடிவுகள் உள்ளன. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க இது உதவும் என்பதும் ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுபோல , சளிக்காச்சல், வைட்டமின் D குறைபாடு, குருதியில் ஆக்சிஜன் குறைவது, என்று பல வியாதிகள் எம்மை தொற்றிக் கொள்ளும் நாம் வெளியே சென்று எமது அன்றாட வாழ்க்கையை நடத்தா விட்டால். அதிலும் தமிழர்கள் என்றால், சோற்றை உண்டு, உறங்கி தற்போது எப்படி பார்த்தாலும் 3 அல்லது 4 கிலோ அதிக எடை போட்டிருப்பார்கள். அதுவும் ஒரு ஆபத்தான விடையம் தான்.