நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் கொரோனா வைரஸின் தாக்கம்.!! உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை.!

கொரோனா வைரஸ் தொற்று நிலைமை உலகம் முழுவதும் மோசமடைந்து வருகிறது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.குறிப்பாக அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளிலிருந்து அதிக தொற்று எண்ணிக்கை பதிவாகிறது என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் எச்சரித்துள்ளார்.சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 70 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களை தொற்றியுள்ளது. அத்தோடு, இந்த வைரஸ் தொற்றால் 408,975க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.கிழக்கு ஆசியாவிற்குப் பிறகு, ஐரோப்பா இந்த நோயின் மையமாக மாறியது. ஆனால் தற்போது அமெரிக்காவிலேயே கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
width=”701″] இந்நிலையில், கறுப்பின மனிதர் ஜோர்ஜ் பிலொய்டின் உயிரிழப்புக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் நடைபெற்ற தீவிர போராட்டங்களால், கொரோனா வைரஸ் தற்போது மேலும் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள உலக சுகாதார நிறுவன இயக்குனர் டெட்ரோஸ் அதானோம், ‘உலகளவில் கடந்த 10 நாட்களில் ஒன்பது நாட்கள் தினசரி ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 1,36,000க்கும் அதிகமாகப் பதிவானது. அதில் கிட்டத்தட்ட 75 சதவீதம் 10 நாடுகளிலிருந்து வந்தவை என தெரிவிக்கப்படுகிறது. அவை பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகள்.ஐரோப்பாவில் நிலைமை சீரடைந்து வருகின்ற போதிலும் உலகளவில் இது மோசமடைந்து வருகிறது. நிலைமை சீராகி வரும் நாடுகளில், கொரோனாவை வென்றுவிட்டோம் என்ற மனநிறைவு எண்ணம்தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாகக் காணப்படுகிறது.உலகளவில் பெரும்பாலான மக்கள் இன்னும் தொற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். எந்த நாடும் முயற்சியை தளர்த்துவதற்கான நேரம் இதுவல்ல.உலக சுகாதார நிறுவனம் சமத்துவத்தையும் இனவெறிக்கு எதிரான உலகளாவிய இயக்கத்தையும் முழுமையாக ஆதரிக்கிறது.எல்லா வகையான பாகுபாடுகளையும் நாங்கள் நிராகரிக்கிறோம்.உலகெங்கிலும் போராடும் அனைவரையும் பாதுகாப்பாக போராடுமாறு கேட்டுகொள்கிறோம்.ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டால் முடிந்தவரை, மற்றவர்களிடமிருந்து குறைந்தபட்சம் ஒரு மீட்டராவது தள்ளியிருங்கள். கைகளை சுத்தம் செய்யுங்கள், முகக்கவசம் அணியுங்கள்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.