புகையிரதம்,பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களுக்கு ஓர் நற்செய்தி…!!

புகையிரதம், அரச மற்றும் தனியார் பேருந்துகளில் முற்கொடுப்பனவு பயண அட்டை பயன்பாடு ஜூலை இறுதியில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

பேருந்துகளில் பணக்கொடுக்கல் வாங்கல் செய்வதன் மூலம் பயணிகள் கொரோனா வைரஸ் தொற்றிற்கு உள்ளாகும் அபாயமுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.போக்குவரத்து சேவையினூாக வைரஸ் பரவலை தடுக்க, உடனடியாக முற்கொடுப்பனவு அட்டை பயன்பாட்டை அறிமுகப்படுத்தும்படி, அமைச்சர் மஹிந்த அமரவீர, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவை அறிவுறுத்தியுள்ளார்.இதேவேளை, இ.போ.ச சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் மாதாந்த சம்பளத்தில் அதிகரிப்பு செய்ய வேண்டுமென்றும் பரிந்துரைத்துள்ளார்.தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து, தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தும்படியும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.பயண அட்டை தயாரித்தல், தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது, ஜூலை கடைசி வாரத்திற்குள் இந்த அட்டையைப் பயணிகள் பயன்படுத்த முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம, அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்தார்.