தனிச் சிங்களப் பிரதேசத்தில் அடர்ந்த காட்டின் மத்தியில் ஆதி முருகன் ஆலயம்!! எவரும் தெரிந்திராத சங்கதிகள்.!! இலங்கையில் இப்படியும் ஒரு ஆலயமா..?

கபில்வத்தை அல்லது கபிலித்தை எனப்படும் இடம் மொனராகலை மாவட்டத்தில்- யால சரணாலயத்தின் மத்தியில் உள்ளது. அங்குள்ள முருகன் ஆலயத்திற்கு மக்கள் யாத்திரை சென்று வழிபட்டு வருகிறார்கள்.

காட்டின் மத்தியில்- பாதைகள் இல்லாத இடத்தில் ஆலயமுள்ளது. 12 சிற்றாறுகளை கடந்து, 32 கிலோமீற்றர் உழவு இயந்திரத்தில் கடினமான பயணம் மேற்கொண்டே ஆலயத்திற்கு செல்கிறார்கள்.சரணாலயத்தின் மத்தியில், கும்புக்கன் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள பண்டைய மரக்கோயில் இது.ஆலயம் என சொல்லப்படுகிற தவிர, அங்கு கட்டடங்கள் இல்லை. பூசகரும் இல்லை.கபிலித்தை எனப்படும் அந்த இடம் முருகப்பெருமான் வாழுமிடம் என்பது பிரதேச மக்களின் நம்பிக்கை.மிகப் பண்டைய காலத்தில் முருகனுக்காக உருவான திறந்தவெளி மரக்கோயில் இது என்று மக்கள் கூறுகிறார்கள்.இங்குதான் முருகப்பெருமான், ஆதியில் தவமியற்றி சக்திகளை பெற்றதாக ஐதீகம் சொல்கிறது.பின்னர் முருகன் கதிர்காமத்தில் சூரசம்ஹாரத்தை முடித்த பின்னர் தனது தங்க வேலை எறிந்ததாகவும் , அந்த வேல் ஓர் புளியமரத்தில் வீழ்ந்ததாகவும், அப்புளியமரத்தின் கீழ் வேடுவர்கள் முருகனின் வேலை வைத்து வழிபட்டு வந்ததாகவும் ஐதீகம் நிலவுகிறது.ஆதியில் கதிர்காமத்தில் போகர் பெருமான் வைத்து பூஜை செய்து காணாமல் போன நவாக்சரி யந்திரம் நவபாஷாண வேல் இங்குதான் இருப்பதாக இந்துக்களால் நம்பப்படுகிறது.இந்த இடத்தை இன்றும் ஆதிகதிர்காமம் என்றே பழைய சிங்கள நூல்கள் குறிப்பிடுகின்றன.சூரசம்ஹாரத்திற்கு முன்னதாக முருகப்பெருமான் தவமிருந்து சக்திகளை பெற்றதாகவும், பின்னர் கதிர்காமத்தில் சூரசம்ஹாரத்தை முடித்ததாகவும், பின்னர் அந்த வேலை எறிந்ததாகவும், அது புளியமரமொன்றில் விழுந்ததாகவும், அந்த புளிய மரத்தின் கீழ் வேடுவர்கள் வேலை வைத்து வழிபட்டதாகவும் கூறப்படும் ஐதீகக்கதைதான் இந்த ஆலயத்தின் வரலாறு.பண்டைய கதிர்காமத்தில் போகர் பெருமான் வைத்து பூஜை செய்து காணாமல் போன நவாக்சரி யந்திரம் நவபாஷாணா வேல் இங்குதான் உள்ளதாகவும் ஐதீகமுள்ளது.சைவ மக்கள் மட்டுமல்ல, அனேக சிங்கள மக்களும் இங்கு தவறாமல் வழிபாட்டிற்கு வருகிறார்கள். அந்த இடத்தை ஆதிகதிர்காமம் என்றே பண்டைய சிங்கள நூல்கள் குறிப்பிடுகின்றன.பண்டைய சிங்கள மன்னர்கள் பலரும் இங்கு வழிபட்ட பின்னரே மகுடம் சூடியதாக பிரதேசத்தில் ஐதீகம் உள்ளது.நவ கோடி சித்தர்கள் இப்பொழுதும் அங்கு வந்து தவமியற்றுவதாகவும் நம்பிக்கையுள்ளது.மேலும், இலங்கையில் அக்காலத்தில் மன்னர்கள் இங்கு சென்று வழிபட்ட பின்னர்தான் தங்கள் அரச பதவிகளை ஏற்பது வழக்கமென்றும் பரம்பரை பரம்பரையாக கதைகள் உலவி வருகின்றன.முறையாக விரதமிருந்து, அங்கு சென்று வந்தால், அடுத்த வருடத்துக்குள் நினைத்து சென்ற காரியம் நடைபெறுமென்பது ஐதீகம்.