பிரமாண்டமாக திருமணம் செய்து இலங்கைக்கு தேனிலவு செல்ல திட்டமிட்ட ஜோடிக்கு நேர்ந்த ஏமாற்றம்.!!

பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் இளம் தம்பதி பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டு இலங்கைக்கு தேனிலவு செல்ல வேண்டும் என திட்டமிட்ட நிலையில் கொரோனாவால் அனைத்தையும் ரத்துச் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பிரித்தானியா மற்றும் பிரான்சுக்கு இடையில் உள்ள பெரிய தீவான ஜெர்சியை சேர்ந்த காதலர்கள் athan Judge மற்றும் Charlotte Medcalf. இருவரும் மருத்துவமனை ஊழியர்களாக உள்ள நிலையில் கடந்த மே 30ஆம் திகதி பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டார்கள்.ஆனால், அவர்களின் திட்டம் கொரோனாவால் ரத்தானது. முக்கியமாக அவர்களுக்கு இருந்த அதிகளவிலான பணி திருமணத்தை தள்ளி போடும் சூழ்நிலைக்கு தள்ளியது. ஆனால், அதற்கு பதிலாக மருத்துவமனையிலியே அனைவர் முன்னிலையிலும் சிம்பிளாக திருமணம் செய்து கொண்டனர்.ஆனாலும், அடுத்தாண்டு மே மாதம் 30ஆம் திகதி தாங்கள் நினைத்த மாதிரி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.இது குறித்து Nathan Judge கூறுகையில், அரசாங்கத்தின் ஆலோசனையின் காரணமாக நாங்கள் திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். திருமணம் செய்து கொள்ளும் நாளுக்காக இரண்டாண்டுகள் திட்டமிட்டோம்.கடந்த மாதம் 30திகதிக்கு முந்தைய நாள் வரை நான் இதைப் பற்றி உண்மையில் சிந்திக்கவில்லை. ஆனால் அடுத்த நாள் நாங்கள் திருமணம் செய்து கொள்ளவிருந்தோம் என்பதை உணர்ந்தபோது, ​​அது முடியாததால் நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்தோம்.பின்னர் அந்த ஏமாற்றத்தை மறக்கடித்து Charlotte-க்கு சர்ப்ரைஸ் கொடுக்க விரும்பினேன். அதன்படி திருமணத்திற்கு தேர்ந்தெடுத்த பூக்காரனைத் தொடர்பு கொண்டு, அதே பூச்செண்டை மீண்டும் உருவாக்கும்படி கேட்டு கொண்டேன்.பின்னர் திருமண உடையில் மருத்துவமனைக்கு சென்று அவளை வியக்க வைத்தேன். அப்போது அவள் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது.ஆனாலும், நாங்கள் நினைத்த மாதிரி இன்னும் திருமணம் நடக்கவில்லை, திருமணத்துக்கு பின்னர் இலங்கைக்கு தேனிலவு செல்ல ஆசையாக இருந்தோம்.ஆனால் கொரோனாவால் வீட்டிலேயே சிக்கிக்கொண்டோம். அடுத்தாண்டு மே 30ஆம் திகதி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளோம் எனவும் கூறியுள்ளார்.