உயர்தர, புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பில் இந்த வார இறுதியில் வெளிவரப் போகும் முக்கிய அறிவிப்பு..!

கல்விப் பொதுத்தராதர உயர்தர மற்றும் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் இந்த வாரத்தில் நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதுவரையில் பாடசாலைகள் திறக்கப்படாமை, பொதுத் தேர்தல் போன்ற காரணிகளினால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் உயர்தரப் பரீட்சை நடாத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம், கல்வி அமைச்சிற்கு அறிவித்துள்ளது.தற்போதைய நிலைமைகளை கருத்திற் கொண்டு எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் உயர்தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளை நடாத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.பொதுத் தேர்தல் நடத்தப்படும் திகதியை கருத்திற் கொண்டே பரீட்சைக்கான நேரஅட்டவணை தயாரிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, உயர்தரப் பரீட்சையை காலம் தாழ்த்துமாறு தனியார் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறைசார் தொழிற்சங்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.