ரயில் நிலையங்களில் திடீரென நிறுத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகள்…!! மீண்டும் கொரோனா அலை ஏற்படுமா..?

சுமார் மூன்று மாதங்களின் பின்னர் இலங்கையில் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் நேற்று வழமைக்கு திரும்பியுள்ளது.

அதற்கமைய நேற்று காலை அலுவலக ரயில்கள் உட்பட 49 ரயில்கள் பல்வேறு மாகாணங்களில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்ததாக ரயில்வே பிரதி கட்டுப்பாட்டாளர் வீ.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.இதேவேளை, தபால் ரயில், பொதிப் போக்குவரத்து, தூர பயண சேவை மற்றும் இணைய ஆசன பதிவுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த நாட்களை போன்று நேற்றும் டோக்கன் வெளியிடுவதோ, ரயில் நிலையங்களில் நுழையும் போதும் வெளியேறும் போதும், உடல் வெப்ப நிலையை சோதனையிடும் நடவடிக்கையோ முன்னெடுக்கவில்லை எனவும், பாதுகாப்பு நடவடிக்கைகளில் இருந்த இராணுவத்தினரும் நீக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.சில ரயில்களில் பயணிகள் நிறைந்து வழிந்ததாக சுட்டிக்காட்டப்படுகிறது. ஒரு சில ரயில்களின் பயணங்கள் ஆசன எண்ணிக்கைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை போக்குவரத்தின் போது சுகாதார வழிமுறைகளை பின்பற்ற தவறினால், கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்படும். இதன் காரணமாக பாரிய விளைவுகள் ஏற்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க கடுமையாக எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.