யாழில் இப்படியும் நடக்கின்றது…நாயைக் கடத்திச் சென்று வயோதிபத் தம்பதிகளிடம் பெரும் தொகைப் பணம் கப்பம்..!!

யாழ்.அச்சுவேலியில் வீடொன்றில் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்ட நாயைக் கடத்தி 25 ஆயிரம் ரூபா பணம் நாயின் உரிமையாளரிடம் கப்பம் பெறப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, அச்சுவேலிப் பகுதியில் தம்பதிகளால் பொமோியன் வகை நாய் ஒன்று வளர்க்கப்பட்டுவந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த நாய் காணாமல்போயுள்ளது. இதனையடுத்து அவர்கள் நாயை தேடி அலைந்தபோதும் நாய் கிடைக்கவில்லை.இந்நிலையில், அந்தப் பகுதியில் வசிக்கும் இரு இளைஞர்கள் குறித்த தம்பதிகளுக்கு தொலைபேசியில் அழைப்பை மேற்கொண்டு காணாமல்போன நாய் இருக்கும் இடம் தமக்கு தொியும். எனவும் அதனை ஒருவர் பிடித்துவைத்துள்ளார். அதனைத் திருப்பிக் கொடுப்பதற்கு 25 ஆயிரம் ரூபாய் பணம் கேட்கிறார் என கூறியுள்ளனர்.இதனையடுத்து 25 ஆயிரம் ரூபா வழங்க தம்பதிகள் இணங்கிய நிலையில், வீட்டுக்கு சென்று பணத்தை பெற்றுச் சென்ற இளைஞர்கள் 30 நிமிடங்களின் பின்னர் காணாமல்போன நாயை கொண்டுவந்து தம்பதிகளிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில், அந்த இளைஞர்களே நாயை பிடித்துவைத்துக் கொண்டு தம்மிடம் 25 ஆயிரம் ரூபா பணம் கப்பமாக பெற்றதாக குறித்த தம்பதி சந்தேகமடைந்துள்ளனர். எனினும், அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறையிடவில்லை.