தீயில் எரிந்து ஆபத்தான நிலையில் இளம் குடும்ப பெண்..ஆபத்தான நிலையில் அனுமதி.!!

தீயில் எரிந்து ஆபத்தான நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றுக் காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, மகாறம்பைக்குளம், ரம்பவெட்டி பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றுக்கும், அயல் குடும்பம் ஒன்றுக்கும் இடையில் வாய்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.இதன்போது இளம் குடும்ப பெண் ஒருவருக்கு மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டு எரிந்த நிலையில், அயலவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.29 வயதுடைய இளம் குடும்ப பெண்ணே தீயில் எரிந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணுக்கு தீ வைத்தது யார் என்பது? தொடர்பில் மாமடு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.