வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு உலங்குவானூர்தியில் மலர் தூவிய இலங்கை விமானப்படை..!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு உலங்குவானூர்தி மூலம் விமானப்படையினர் மலர் தூவியுள்ளனர்.

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்றய தினம் (8) அதிகாலை சிறப்புற ஆரம்பமானது.நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆலய உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக மட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் ஆலய வழிபாடுகளில் கலந்து கொள்ள முடியாது என குறிப்பிடப்பட்டிருந்தது.இந்நிலையில் ஆலயத்தை சூழ இராணுவத்த்தினர் குவிக்கப்பட்டுள்ளதோடு நூற்றுக்கணக்கான பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளதோடு, வீதித் தடைகள் போட்டு ஆலயத்திற்கு வருபவர்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. எனினும், ஆலயத்துக்கு வருகைதந்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு மக்கள் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.இந்த நிலையிலேயே, வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு உலங்குவானூர்தி மூலம் விமானப்படையினர் மலர் தூவியுள்ளனர்.