ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடித் தீர்மானம்! அரசாங்க சேவையில் நேர மாற்றம்..!!

அரச மற்றும் தனியார் பிரிவினருக்கான அலுவலக நேரத்தில் மாற்றத்தை கொண்டு வர ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.மக்களுக்கு தரமான சேவையை வழங்கும் அதேவேளையில், தனியார் பேருந்து நடவடிக்கையை முறையான முறையில் முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். இன்று மாலை இடம்பெற்ற கூட்டத்தின் போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.வாகன நெருக்கடியை தடுப்பதற்காக அலுவலக நேரத்தை மாற்றுவது தொடர்பில் ஜனாதிபதி இந்த கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார்.வாகன நெருக்கடியை தடுப்பதற்காகவும் பொது மக்களின் போக்குவரத்து நெருக்கடிகளை தடுப்பதற்காகவும் தனியார் மற்றும் அரச பிரிவுகளின் சேவைகளுக்கான நேரத்தை மாற்ற வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.அதற்கமைய தனியார் பிரிவுக்கான பணி ஆரம்பிக்கும் நேரத்தை காலை 10 மணிக்கு மாற்ற ஜனாதிபதி ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

-tamilwin.com