அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபயவின் விசேட உத்தரவு..!!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்காக பணியாற்றவோ, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவோ கூடாதென அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

ஒரு கட்சியின் சார்பாக அரசியல் செய்ய விரும்பினால், ஒரு அரச நிறுவனத்தின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர் அல்லது வேறு எந்த அதிகாரியும் இராஜினாமா செய்யலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.