நடந்த கொலைக்கு பரிகாரமாக கறுப்பினத்தவர்களின் கால்களைக் கழுவி விடும் வெள்ளை இன மக்கள்..!!

நடந்த கொலைக்கு மன்னிப்பு கேட்க்கும் விதமாகவும், நல்லெண்ண அடிப்படையிலும் அமெரிக்காவில் கறுப்பின மத தலைவர்களின் கால்களை வெள்ளை இன மக்கள் கழுவி வருகிறார்கள். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவில் நடக்கும் ஆர்பாட்டங்களை உடனே முடிவுக்கு கொண்டுவர இந்த நடவடிக்கையில் வெள்ளை இன மக்கள் இறங்கியுள்ளார்கள்.

எது நடந்தாலும் பாரவாயில்லை, நான் இராணுவத்தை வீதிக்கு அனுப்பி போராட்டங்களை கட்டுப்படுத்துவேன் என்று அதிபர் ட்ரம்ப் பேசி வரும் நிலையில், போராட்டங்களும் குறைந்தபாடாக இல்லை.எம்மிடையே இனப் பாகுபாடு வேண்டாம் என்று காட்டவே தாம் இப்படிச் செய்வதாக வெள்ளை இனத்தவர்கள் தெரிவித்துள்ள நிலையில், நடந்த ஒரு கொலைச் சம்பவத்திற்கு இவ்வளவு தூரம் போராட்டங்கள் நடக்கின்றது.