தமிழகத்தின் ஆற்றங்கரைக் கடற்கரையில் கரையொதுங்கிய அரியவகைச் சுறா.!!

ராமநாதபுரம் அருகே ஆற்றங்கரை கடற்கரையில் 18 அடி நீளமும் 700 கிலோகிராம் நிறையும் கொண்ட புள்ளி சுறா மீன் உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் நேற்று மாலை கரை ஒதுங்கியுள்ளது.பாக்ஜல சந்தி பகுதியான ஆற்றங்கரை கடற்கரையில் பிரம்மாண்ட மீன் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து நேற்று மாலை வனத்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.இதன்போது வேல்ஸார்க் எனப்படும் அரியவகை சுறா மீனே உடலில் காயங்களுடன் இறந்த நிலையில், கரை ஒதுங்கியுள்ளமை தெரியவந்தது.இந்த பிரம்மாண்ட மீன் படகுகளை புரட்டிப் போடும் அளவுக்கு பலம் வாய்ந்ததாகும் என தெரிவிக்கப்படுகிறது.ஆழ்கடல் பகுதியில் மட்டும் வசிக்கக்கூடிய இந்த மீன் கப்பல்களில் மோதி காயம் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என வனத்துறையினர் கருதுகின்றனர்.குறித்த சுறா மீனை மீனவர்களின் உதவியுடன் கரைக்கு கொண்டுவர முயற்சித்த போதும் இயலாததால் ஜே.சி.பி இயந்திரம் மூலம் இழுத்து கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து உடற்கூற்று ஆய்வு செய்து மீன் இறந்ததற்கான காரணங்கள் குறித்து வனத்துறையினர் ஆய்வு நடத்தியுள்ளனர்.

இதன்போது, குறித்த சுறா மீன் சுமார் 35 தொடக்கம் 40 வயதை கொண்டது எனவும், ஆண் சுறா மீன் எனவும், காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டமையினால் குறித்த புள்ளிச் சுறா பலவீனமாக காணப்பட்டமையினால் பாறையில் மோதி உயிரிழந்துள்ளதாக கால்நடை வைத்தியரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.