பித்தம், வாந்தி, மயக்கம் போன்றவை இருந்தால் உடனடியாக இதனை செய்யுங்கள்..!!

தலை சுற்றல் மருந்து கடுமையான பித்தம், தலை சுற்றல் வாந்தி மயக்கம் போக்கும் எளிய மருத்துவம்பித்தம் அதிகரித்தால் தொடர் வாந்தி தலை சுற்றல் ஏற்படும் உள்ளங்கால் உள்ளங்கைகளில் தோல் உரிதல் உண்டாகும் இளநரை ஏற்படுதல்

பொடுகு தொல்லை அதிகரித்தல் தோல் சுருங்குதல் முக சுருக்கம் ஏற்படும் தோலில் மினுமினுப்பு குறையும் வாந்தி ஏற்படக் காரணம் குடல் பகுதியில் கழிவுகள் தேங்கி இருத்தல்அஜீரணம் புளித்த ஏப்பம் தூக்கமின்மை ஆகியவை வாந்தி ஏற்படக் காரணமாக அமைகின்றன.

தலை சுற்றல் அறிகுறிகள்:தூக்கமின்மை , கண் எரிச்சல் , கண் விழி சிவப்படைதல் , கடுமையான தலை சுற்றல் , வாயில் உமிழ் நீர் அதிகப் படியாக சுரத்தல் போன்ற அறிகுறிகள் தலை சுற்றலின்போது தெரியும்.தலை சுற்றல் ஏற்படக் காரணம்:காப்பி டீ அதிகமாகக் குடித்தல் , உடல் உஷ்ணம் , உணவு முறை அசைவ உணவுகள் , மலச்சிக்கல் போன்றவையாகும்

எளிமையான முறையில் இதை நீக்கிக் கொள்ள மாதம் ஒருமுறை பட்டினி விரதம்:வாரம் ஒருநாள் பழச் சாறுகள் மட்டும் உணவாக எடுத்தல் மாதம் ஒருமுறை அல்லது ஒரு மண்டலத்திற்கு ஒருமுறை சுகபேதிக்கு மருந்து எடுத்தல் தூக்கமின்மை போக்க தைலக்குளியல் எடுத்தல் போன்றவை இந்நோய் வராமல் பாதுகாக்கும் அதையும் மீறி இந்த நோய் வந்து விட்டால் அதைப் போக்கும் அற்புதமான மருந்து இஞ்சி லேகியம் ஆகும்.

முற்றிய இஞ்சி தோல் நீக்கியது -நூறு கிராம் (துருவிக் கொள்ளவும்),பனை வெல்லம்- நூற்று ஐம்பது கிராம் ( தூள் செய்து கொள்ளவும் )ஏலக்காய் தூள் – மூன்று கிராம் , நாட்டுப் பசு நெய்- நூறு மில்லி அல்லது தேவையான அளவு.வாணலியில் நாட்டு பசு நெய் ஊற்றி சூடானதும் இஞ்சி துருவலைப் போட்டு கிளறவும் அத்துடன் பனை வெல்லம் சேர்த்துக் கிளறவும்அதன் பின் ஏலக்காய் தூள் போட்டுக் கிளறவும்சிறு தீயில் நன்கு கிளறி லேகியப் பதம் வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.

இஞ்சி லேகியமாக மாறி விட்டவுடன் இறக்கி ஆற வைத்து கண்ணாடிப் பாட்டிலில் சேமிக்கவும் இரவு சிறிய நெல்லிக்காய் அளவு சுவைத்து சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர தலை சுற்றல் கிறுகிறுப்பு வாந்தி அனைத்தையும் தீர்க்கும் சீரணம் தூண்டப் படும் பித்த மயக்கம் போகும்