மண்மேட்டில் மோதி முச்சக்கர வண்டி கோர விபத்து.. ! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு நேர்ந்த பரிதாபம்..!!

நுவரெலியாவிலிருந்து காலிப் பகுதி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்று இன்று காலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் கொட்டகலை பொரஸ்கிறிக் பகுதியில் மண்மேட்டில் மோதிய முச்சக்கரவண்டி பிரதான வீதியில் குடைசாய்ந்துள்ளது.சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. விபத்திற்கு உள்ளான முச்சக்கரவண்டியில் சாரதியும், அவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் ஆகியோர் பயணித்துள்ளனர்.அவர்கள் நால்வரும் காயங்களுக்கு உள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்