ஏழு வயதுச் சிறுவனுக்கு பிறந்த நாளன்று நிகழ்ந்த அதிசயம்…!! கனவை நனவாக்கிய பெற்றோர்..!!

7 வயது சிறுவனின் கனவு அவனது பிறந்த நாளன்று நிஜமாகியுள்ளது. அவனது வாழ்வில் நிகழ்ந்த ஆச்சரியம் என்னவென்று இந்த செய்தியில் பார்க்கலாம்.கார் மற்றும் பைக் உள்ளிட்ட ஆட்டோமொபைல் தயாரிப்புகள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பவர்கள் ஏராளம் பேர். கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் மீதான இந்த அன்பு பெரும்பாலும் வாழ்க்கையின் பின் நாட்களில்தான் ஒருவருக்கு தொடங்கும். அதாவது ஓரளவிற்கு வயது வந்த பின்பு.

ஆனால், ஒரு சிலர் மிகச் சிறு வயதில் இருந்தே ஆட்டோமொபைல் உலகில் அதிக ஆர்வம் உள்ளவர்களாக உள்ளனர்.கார்கள் மீது பேரன்பு செலுத்தும் ஒரு சிறுவனின் கனவை ஃபோர்டு நிறுவனம் நிஜமாக்கியிருப்பதே இதை தற்போது பேசி கொண்டிருக்க காரணம். அந்த சிறுவனின் பிறந்த நாளன்று, அவனுக்கு மிகவும் விருப்பமான கார்களில் ஒன்றான மஸ்டாங் உடன் அவனுக்கு ஃபோர்டு நிறுவனம்  இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. அத்துடன் அந்த சிறுவனை அதில் ரைடு செல்லவும் அனுமதித்திருக்கிறது.

நாம் இங்கே பேசி கொண்டிருக்கும் சிறுவனின் பெயர் அபீர். சமீபத்தில் அவனுக்கு 7வது பிறந்த நாள் வந்தது. நடை பழகத் தொடங்கிய காலம் முதலே அபீருக்கு கார்கள் என்றால் கொள்ளைப் பிரியம் என அவனது பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். அபீருக்கு 2 வயதாக இருந்தபோது அவனது தந்தை பொம்மை கார் ஒன்றாக பரிசாக வழங்கியுள்ளார். அதன் பின்புதான் கார்கள் மீதான அபீரின் ஆர்வம் அளவு கடந்து சென்றது.எனவே அபீரின் குடும்பத்தாரும், ஃபோர்டு நிறுவனமும் அவனது 7வது பிறந்தநாளன்று சர்ப்ரைஸ் அளிக்க முடிவு செய்தனர்.

இதன் விளைவாக உண்மையான ஃபோர்டு மஸ்டாங் (Ford Mustang) கார் பரிசாக அபீர் முன்பு வந்து நின்றது. பிறந்த நாளன்று கண்கள் கட்டப்பட்ட நிலையில், அபீர் ஒரு திறந்த வெளிக்கு அழைத்து வரப்பட்டான்.கண் கட்டுக்கள் அவிழ்க்கப்பட்டதும் மகிழ்ச்சியில் அபீர் துள்ளி குதித்ததற்கு அளவே இல்லை. அவன் முன்னால் சிகப்பு நிற மஸ்டாங் நின்று கொண்டிருந்ததே இதற்கு காரணம்.

அதன் பின்பு அபீர் காருக்குள் ஏறினான். அந்த காரின் ஸ்போர்ட்டியான இன்டீரியர்கள் அவனுக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கும். அபீரின் பிறந்த நாள் கேக்கையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். கார் வடிவிலேயே அந்த கேக்கும் டிசைன் செய்யப்பட்டிருந்ததுதான் அதன் சிறப்பம்சம். இந்தக் காணொளியை நீங்கள் கீழே காணலாம்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்