நீண்ட நாட்களின் பின் யாழில் களைகட்டிய பொன் அணிகளின் போர்….! 187 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்ற சென். பற்றிக்ஸ்….!!

யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான ராஜன் கதிர்காமர் சுற்றுக் கிண்ணத்துக்கான ஆட்டத்தில் 187 ஓட்டங்களால் வென்றது சென். பற்றிக்ஸ்.

 

யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று இந்த ஆட்டம் இடம்பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி நிர்ணயிக்கப்பட்ட 50 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 9 இலக்குகளை இழந்து 299 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான டிலக்சன் 96 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் டிகாஸ் 4 இலக்குகளையும், சிந்துயன் 3 இலக்குகளையும், கேசவன் 2 இலக்குகளையும் கைப்பற்றினர். பதிலுக்குக் களமிறங்கிய யாழ்ப்பாணக் கல்லூரி அணி 112 ஓட்டங்களில் சகல இலக்குகளையும் இழந்து 187 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில் 3 இலக்குகளையும், கஸ்ரோ, டினிசியஸ் இருவரும் தலா 2 இலக்குகளையும், மொனிக் நிதுசன், டிலக்சன் தலா ஓர் இலக்கையும் கைப்பற்றினார். போட்டியின் சுருக்கம்:

புனித பத்திரிசியார் கல்லூரி 299 (50) – டிலக்சன் 96, மொனிக் நிதுசன் 51, கஸ்ரோ 45, பிரகேஷ் 4/32, சிந்துஜன் 3/56, கேசவன் 2/64

யாழ்ப்பாண கல்லூரி – 112 (43) – பியேட்றிக் 3/28,கஸ்ரோ 2/18, டனீசியஸ் 2/19

போட்டி முடிவு – 187 ஓட்டங்களால் புனித பத்திரிசியார் கல்லூரி வெற்றி

விருதுகள்:

சிறந்த துடுப்பாட்ட வீரர் – டிலக்சன் (புனித பத்திரிசியார் கல்லூரி)

சிறந்த பந்துவீச்சாளர்- பிரகேஷ் ( யாழ்ப்பாண கல்லூரி)

சிறந்த சகலதுறை வீரர் – மொனிக் நிதுசன் (புனித பத்திரிசியார் கல்லூரி)

சிறந்த களத்தடுப்பு வீரர்- ஐவன் றொசாந்தன் (புனித பத்திரிசியார் கல்லூரி)

படங்கள் – ஐ.சிவசாந்தன்

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்