விண்வெளி வரலாற்றில் முதன் முறையாக அதிகார பூர்வமாக வெளியிடப்பட்ட கருந்துளையின் அரிய புகைப்படம்…!

விண்வெளியில் காணப்படும் கருந்துளையின் முதல் புகைப்படத்தை விஞ்ஞானிகள் நேற்று வெளியிட்டனர்.விண்வெளியில் அதிபயங்கர ஈர்ப்பு சக்தியுடன் கூடிய ‘பிளாக் ஹோல்’ எனப்படும் கருந்துளைகள் உள்ளன.மிகப்பெரிய நட்சத்திரங்களை கூட உள்ளிழுக்கும் சக்தி இந்த கருந்துளைகளுக்கு உள்ளன.

இந்த கருந்துளையை ஆய்வு செய்ய 2017 இல் சர்வதேச அளவில் ஈவென்ட் ஹாரிசன் தொலைநோக்கி திட்டம் உருவாக்கப்பட்டது.ஹவாய், அரிசோனா, ஸ்பெயின், மெக்சிக்கோ, சிலி உள்ளிட்ட உலகின் பல இடங்களில் 8 ரேடியோ டெலஸ்கோப்களை ஒன்றிணைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுத் திட்டம் தான் ஈவென்ட் ஹாரிசோன்.இந்த ஆய்வுத் திட்டம் மூலம் 50 மில்லியன் ஒலி ஆண்டுகள் தொலைவில் உள்ள எம்-87 என்ற நட்சத்திர கூட்டத்தில் உள்ள கருந்துளை ஆராயப்பட்டது.8 டெலஸ்கோப்களின் தகவல்களை ஒருங்கிணைத்து கருந்துளையின் இயற்கையான போட்டோ எடுக்கப்பட்டது. இது வரை கருந்துளையின் இயற்கையான புகைப்படம் வெளியானதில்லை.

வெறும் வரைபட வடிவமாகவே வெளிவந்து கொண்டிருந்தது. எம் – 87 நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள கருந்துளையின் இயற்கையான புகைப்படத்தை விஞ்ஞானிகள் நேற்று முதன் முதலாக வெளியிட்டனர்.பிரசெல்ஸ், ஷங்காய், டோக்கியோ, வாஷிங்டன், சாண்டியாகோ மற்றும் தைபே ஆகிய நகரங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த கருந்துளையின் புகைப்படம் வெளியிடப்பட்டது.

ஒரஞ்சு மற்றும் வெளிறிய வாயுக்களின் மத்தியில் இந்த கருந்துளை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்