நள்ளிரவு வரை மும்பாயில்…! காலையில் கொழும்பு வந்து இலங்கை அணிக்காக விளையாடி அசத்திய ஜாம்பவான் மலிங்க…!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க. இவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அதேசமயம் இலங்கையில் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கி வருகிற 11- ஆம் திகதி வரை நடக்கிறது.உள்ளூர் தொடரில் விளையாடினால்தான் உலகக்கோப்பைக்கான இலங்கை அணியில் இடம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் உறுதியாக தெரிவித்துவிட்டது. அதேசமயம் ஐபிஎல் தொடரில் விளையாடவும் அனுமதி அளித்தது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் மலிங்கா நேற்று வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையிலான ஆட்டத்தில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியிலும், அதேசமயம் இலங்கை உள்ளூர் தொடரிலும் விளையாட முடிவு செய்தார்.

அதன்படி நேற்றைய போட்டியில் மலிங்க பங்கேற்று விளையாடினார். இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய மலிங்கா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

போட்டி முடிய நள்ளிரவு 12 மணி ஆகியது. போட்டி முடிந்த உடனே மைதானத்தில் இருந்து புறப்பட்ட மலிங்கா மும்பையில் இருந்து இலங்கைக்கு விமானத்தில் பறந்தார். சுமார் இரண்டரை மணி நேர பயணத்திற்குப் பிறகு இலங்கை சென்றடைந்தார்.

அங்கிருந்து ஒரு மணி நேரம் பயணம் செய்து போட்டி நடைபெற்ற கண்டி சென்றார். அங்கு இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில்  காலி அணியின் கேப்டனாக களம் இறங்கி விளையாடினார். அதில் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.

12 மணி நேரத்திற்குள் இரண்டு அணிகளுக்காக விளையாடி 8 விக்கெட்டுக்கள் கைப்பற்றி அசத்தினார். ஏப்ரல் 11ஆம் திகதி வரை காலே அணிக்காக விளையாடுகிறார். அதன்பின் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் சனிக்கிழமை (6 ஆம் திகதி ) சன்ரைசர்ஸ் ஐதராபாத்தையும், 10-ஆம் திகதி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியையும் எதிர்கொள்கிறது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்