மாபெரும் வரலாற்றுச் சாதனையை அம்பாந்தோட்டையில் நிலைநிறுத்திய யாழ்ப்பாணம்..!

தேசிய இளைர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற 10 ஆவது யொவுன்புரய நிகழ்வில் 25 மாவட்டங்கள் பங்கு பற்றி இருந்த வேளை அலங்காரம் மற்றும் சிந்தனை ஆக்கத்திறனிற்கு 2ம் இடத்தினை பெற்று, வரலாற்று சாதனை படைத்து உள்ளது யாழ்ப்பாண மாவட்டம்.மிகவும் முக்கிய விருதான இவ் விருதினை முதன் முதலில் பெற்ற ஒரே ஒரு தமிழ் மாவட்டம் என்பது குறிப்படத்தக்கது.

இவ் விருதினை பெற அயராது உளைத்த மாவட்ட உதவிப்பணிப்பாளர் வினோதினி சிறீமேனன் மற்றும் இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் சூயாழ் மாவட்ட இளைஞர்கழக சம்மேளன தலைவர்  தர்சன், மற்றும் விசேடமாக முன் ஏற்பாட்டு குழு இளைர்களின் அயராத உளைப்பின் மூலமும், மற்றும் யாழ் மாவட்ட இளைர்களின் பங்களிப்போடு, யாழின் கொடி அம்பாந்தோட்டையில் பறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்