பெரும்பான்மையின வேட்பாளர்களுக்கு சிம்மசொப்பனமாக ஜனாதிபதித் தேர்தலில் களம்குதிக்கும் தமிழன்…!! வேகமாகச் சூடுபிடிக்கும் ஜனாதிபதித் தேர்தல் களம்..!!

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் ஒருவரை நிறுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரகள் சிலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மத்திய செயற்குழுவிடம் யோசனை முன்வைத்துள்ளனர்.தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேல்தலில் களமிறக்குவது மிகவும் சிறந்த செயல் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.ஜனாதிபதித் தேர்தலுக்காக முன்னர் குமார் பொன்னம்பலம் நின்றமைக்குப் பின்னர் தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் தெற்கில் இருந்து வரும் வேட்பாளருக்கு தங்களின் ஆதரவை வழங்கி வடக்கு – கிழக்கு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள நினைத்தாலும், அது ஒருபோது இடம்பெறவில்லை.

எனவே, கடந்த காலங்களில் தமிழ் வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாதமையினால் தற்போது தமிழர்கள் தொடர்பில் சிந்தித்து செயலாற்றும் ஒரு தமிழ் தலைவர் இன்மை, பெரும் வேதனைக்குரிய விடயம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில், இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்தும் கேள்வியெழுப்பி வருவதாகவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் ஆராய்ந்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மத்திய செயற்குழுவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்