வன்முறைகளை தூண்டும் வகையிலான உள்ளடக்கங்களை நீக்காத சமூக வலைத்தள நிர்வாகிகளுக்கு கடூழியச் சிறை….!! அதிரடி காட்டும் அவுஸ்திரேலியா..!

வன்முறைகளை தூண்டும் வகையிலான உள்ளடக்கங்களை நீக்குவதற்கு சமூக வலைத்தள நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில், அதன் நிர்வாகிகளுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சமூக வலைத்தளங்கள் குறித்த சட்டத்தை கடினமாக்க திட்டமிட்டு வருவதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.வன்முறைகளை தூண்டும் வகையிலான உள்ளடக்கங்களை நீக்குவதற்கு சமூக வலைத்தள நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இந்த கடினமான சட்டத்தை அமுல்படுத்த நேரிடும் என அவுஸ்ரேலிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.

சிட்னியில் வைத்து இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் ஸ்கொட் மொறிசன் இதனை தெரிவித்தார்.

வன்முறைகளை தூண்டும் வகையிலான உள்ளடக்கங்களை நீக்குவதற்கு சமூக வலைத்தள நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில், இச்சட்டத்தின் கீழ் சமூக வலைத்தள நிர்வாகிகளுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இன்றேல், குறித்த நிறுவனங்கள் தமது மொத்த வருவாயிலிருந்து 10 சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து கிறிஸ்ட்சேர்ச் மசூதியில் 50 பேரின் உயிரை காவுகொண்ட கொடூர தாக்குதல் ஃபேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டிருந்தது. இச்சம்பவவம் சமூக வலைத்தளங்கள் மீதான கடும் விமர்சனங்களை தோற்றுவித்திருந்தது.

இந்நிலையிலேயே, அவுஸ்ரேலியாவின் இந்த அதிரடி நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்