சுறா, திமிங்கிலத்தைவிட பயங்கரக் கொலையாளி..?? நேற்று ஆழ் கடலில் நடந்தது என்ன? பெரும் அதிர்ச்சியில் ஆய்வாளர்கள்…!!

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கடித்துத் துண்டாக்கப்பட்ட சுறா மீன் ஒன்றின் தலையை கடலிலிருந்து மீட்டமை அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.அது இன்னொரு மிகப்பெரிய வேட்டைக்கார உயிரினத்தால் கடித்துத் துண்டாடப்பட்டிருப்பதாக ஊகிக்கப்படுகிறது.

ஜேசன் என அறியப்படும் அந்த மீனவர் ஒரு தூண்டிலாளர் என சொல்லப்படுகிறது. படகு மூலம் அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் கடலுக்குச் சென்று தூண்டில் மூலமாக கடலில் மீன் பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வழமைபோல் நடுக்கடலில் பயங்கரமான காட்சி ஒன்றைக் கண்டுள்ளார்.நன்கு வளர்ந்த ‘மாகோ’ எனப்படும் பயங்கர சுறா ஒன்றின் தலை பிறிதொரு விலங்கால் கடித்து துண்டாடப்பட்ட நிலையில் கடலில் மிதந்துள்ளது.அந்த காட்சியைக் கண்டதிலிருந்து தான் பித்துப்பிடித்துப்போய் இருப்பதாக அவர், துரதிஷ்டவசமாக அந்த சம்பவத்தைக் காணாமல்போய்விட்டதாக முகநூல் தளத்தில் தெரிவித்திருகின்றார்.

அந்த துண்டிக்கப்பட்ட சுறாவின் தலை நூறு கிலோவுக்கும் அதிகமாக காணப்படுவதாக கூறுவதுடன் அதிலிருந்து 35 கிலோ வரையான இறைச்சியினை தாம் எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடலில் காணப்படும் சுறா இனங்களிலே மாகோ சுறா அதி பயங்கரமானது என சொல்லப்படுகிறது. ஒரே கடியில் நன்கு வளர்ந்த இரையை துண்டாடக்கூடிய தன்மை மாகோ சுறாக்களுக்கு இருப்பதாக தரவுகள் கூறுகின்றன. இதற்கு காரணம் அதன் ரம்பம் போன்ற பற்கள்தான் என குறிப்பிடப்படுகிறது.

இவை ஐநூறு கிலோவுக்கும் மேற்பட்ட எடையில் வளர்வதுடன் 12 அடிக்கும் மேற்பட்ட நீளத்தில் வளரக்கூடியது என மேலதிக தகவல்கள் கூறுகின்றன.

இதைவிட கடலில் எதிர்ப்படும் ஏனைய வேட்டையாளிகளை பயமுறுத்தும் தன்மையும் மணிக்கு 46 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தக்கூடிய சக்தியும் இந்த சுறாவிடம் காணப்படுகின்றது.

இவ்வாறான ஒரு பயங்கர வேட்டைக் கொலையாளியையே கடித்துத் துண்டாடுமளவுக்கு கடலில் எந்த உயிரினத்தால் முடிந்திருக்கிறது என்ற கேள்வி பலரையும் திகிலடைய வைத்துள்ளது.எவ்வாறாயினும் இது ஓர்காஸ் (Orcas) எனப்படும் கொலையாளித் திமிங்கிலத்தால் கடியுண்டிருக்கலாம் என சிலர் கருத்துக் கூறுகின்றனர். ஒர்காஸ் திமிங்கிலங்கள் கடலில் உள்ள மிகப்பெரிய விலங்குகளில் ஒன்றாக இருப்பதுடன் இவை நான்கிலிருந்து ஆறு தொன்களுக்கு வளரக்கூடியது என்ற கருத்து இதனை வலுப்படுத்துகிறது.

ஆனால், ஒர்காஸ் திமிங்கிலம் இதுபோன்ற சுறாக்களை வேட்டையாடும்போது அவற்றின் கல்லீரலை மட்டும் உண்டுவிட்டு மீதியை கடலின் ஆழத்துள் புதைத்துவிடும் என சொல்லப்படுகிறது. ஆதலால், இது அந்த திமிங்கிலத்தின் தாக்குதலாக இருக்காது என மறுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் ஷாமஸ் ஜான்ஸ்டனின் என்பவர், இது ஒரு புலி சுறாவின் வேலையாக இருக்கும் என கருதுகிறார். புலி சுறா 12 அடியுள்ள மகோ சுறா ஒன்றைக் கொன்றதை தான் பார்த்ததாக அவர் கூறுகிறார்.ஆனால், அது புலி சுறாவினால் கடிபடவில்லை என்கிறார் Greg Doble என்பவர். ஏனெனில் புலி சுறாவானது சுறாக்களில் பயங்கரமானதும் 20 அடிக்கும் மேலான நீளத்திலும் வளரக்கூடியது. ஆனாலும், துண்டிக்கப்பட்ட அந்த தலையில் காணப்பட்ட கடி காயம் புலி சுறாவின் பல் ஒழுங்கிற்கு ஒத்துவரவில்லை என சுட்டிக்காட்டப்பட்டியுள்ளார்.எவ்வாறாயினும் மீட்கப்பட்ட அந்த சுறாத் தலையினை இறைச்சிக்காக பிரித்தபோது அதனுள்ளிருந்து மார்லின் மீன் ஒன்றின் மூக்கு முனையில் காணப்படும் கூரிய முள்ளு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலத்திற்கு முன்னர் அந்த சுறா மார்லின் மீனின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கக்கூடும் என்பதுடன் மகோ சுறாவுக்கு இருக்கக்கூடிய தனித்துவமான அபூர்வ சக்தியால் காயம் விரைவாக ஆறி காயக்குழி மூடிவிடுகிறது.இந்த நிலையில் நேற்று மீட்கப்பட்ட அந்த சுறாவினை இரு கூறாக பிரித்தது எது என்ற கேள்வி எழுகின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்